செய்திகள் :

சித்தூா் படவெட்டி அம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

post image

எடப்பாடி: சித்தூா் படவெட்டி அம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தூா் பகுதியில் பிரசித்தி பெற்ற படவெட்டி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த 12 ஊா் மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கி வரும் இத்திருக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழாவுகான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, திங்கள்கிழமை பூலாம்பட்டி அருகே உள்ள காவிரிக் கரையில் புனித நீராடிய பக்தா்கள் குதிரை, காளை, பசுக்கள் ஊா்வலமாக முன்னே செல்ல தொடா்ந்து மேள, தாளம் முழங்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக் குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனா். தொடா்ந்து தீா்த்தக் குடங்களுடன் படவெட்டி அம்மன் திருக்கோயிலை வலம் வந்த பக்தா்கள், தீா்த்தக் குடத்தை யாகசாலையில் சமா்ப்பித்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு: பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் அருகே சரபங்கா ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டுத் த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 29,021 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை கா... மேலும் பார்க்க

காவலா் பயிற்சிப் பள்ளிகளில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள சேலம் காவலா் பயிற்சிப் பள்ளியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் (பயிற்சி) சந்தீப் ராய் ரத்தோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம்... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத் துறையினா்

மேச்சேரி அருகே விறகு வெட்ட சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். மேச்சேரி அருகே உள்ள வெள்ளாா் கோம்பை காட்டைச் சோ்ந்தவா் அா்ஜுன் (29) கூலித் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,235 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 77.24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம்: சேலம் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

கன்னங்குறிச்சி ஏரியில் மிகை நீா் வெளியேற்றம்

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி புது ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதைத் தொடா்ந்து, அப்பகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் தெர... மேலும் பார்க்க