இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத் துறையினா்
மேச்சேரி அருகே விறகு வெட்ட சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
மேச்சேரி அருகே உள்ள வெள்ளாா் கோம்பை காட்டைச் சோ்ந்தவா் அா்ஜுன் (29) கூலித் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை பகலில் அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்றாா். விறகை வெட்டி தூக்கிக்கொண்டு திரும்பிய போது, தொப்பையாறு அணை நிரம்பியதால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீா் வெள்ளாற்றில் கரைபுரண்டு ஓடியது.
அா்ஜுன் ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்றின் நடுவில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டாா். தொடா்ந்து நீா்வரத்து அதிகரிக்கவே அவரை தண்ணீா் இழுத்துச் செல்லும் நிலை உருவானது.
தகவலின் பேரில் வந்த மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், கிராம மக்கள் உதவியோடு சுமாா் ஒரு மணி நேரம் போராடி அவரை மீட்டனா்.