செய்திகள் :

சினிமாவிலிருந்து விலகும் கீர்த்தி சுரேஷ்?

post image

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு, வருண் தவான் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பேபி ஜான் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதையும் படிக்க: ராம் சரணுக்கு 256 அடி கட் - அவுட்!

சில நாள்களுக்கு முன் தன் காதலர் ஆண்டனியை கோவாவில் திருமண செய்துகொண்ட கீர்த்தி, பேபி ஜான் புரமோஷன் நிகழ்வுகளில் தாலியுடன் கலந்துகொண்டு வைரலானார்.

இந்த நிலையில், திருமண வாழ்விற்கு நேரம் ஒதுக்க திட்டமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் சினிமாவிலிருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்ததாக, இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய திரைப்படம் வெளியாகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்!

வெளியானது ஜீவாவின் ‘அகத்தியா' பட டீசர்

ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகத்தியா' படத்தின் டீசர் வெளியானது. பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படம் அகத்தியா. இதில் ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ய... மேலும் பார்க்க

ரசிகை பலியான விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!

ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் க... மேலும் பார்க்க

தெலுங்கில் அறிமுகமான அதிதி ஷங்கர்..! முதல் பாடல்!

நடிகை அதிதி ஷங்கர் முதல்முறையாக தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். பைரவம் என்ற இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. உக்ரம் படத்தை இயக்கிய விஜய் கனகமேடலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கே.கே.ராதாம... மேலும் பார்க்க

குளிர்பானத்தை தடை செய்ய மாட்டீர்கள்.. நான் விளம்பரத்தில் நடிக்கக் கூடாதா? வைரலாகும் ஷாருக் கான் பேச்சு

மும்பை: ஷாருக்கான் பேசினாலே சர்ச்சையாகும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், அதுபோலத்தான் அவர் குளிர்பானம் தொடர்பாகப் பேசியிருப்பது போது வைரலாகி வருகிறது.குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குளிர்பானத... மேலும் பார்க்க