செய்திகள் :

``சினிமாவைத் தாண்டிய நெருக்கம்...'' - மண்புழு தாத்தா... விழாவில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

post image

மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எழுதிய, "மண்புழு தாத்தாவின் மண்நல புரட்சிப் பாதை" என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று (24/11/2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணையில் நடைபெற்றது.

'கரிம வேளாண் கட்டமைப்பு' மற்றும் 'தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணை வேளாண் சுற்றுலா நடுவோம்' அமைப்பு இணைந்து காலை 9 மணி அளவில் இந்த நிகழ்ச்சியை தொடங்கியது.

சுல்தான் அகமது இஸ்மாயில்

நிகழ்ச்சியின் முதல் கட்டமாக தெருக்கூத்து கலையின் மூலம் நிகழ்ச்சியின் கருவை நாடகமாக தெருக்கூத்து கலைஞர்கள் நடித்துக் காட்டி சிறப்பு விருந்தினர் அனைவரையும் வரவேற்றனர். தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை நிறுவனர் வீ.இறையழகன் வரவேற்புரை வழங்கினார்.

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடப் பண்ணை வீ.தமிழ்மணி தலைமை தாங்கி உரையாற்றினர்.

கரிம வேளாண் கட்டமைப்பு நிறுவனர் முனைவர் அரு.சோலையப்பன் மற்றும் தலைவர் அரியனூர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

நூலை வெளியிட்ட எமரால்டு ஹர்ஷா, "இந்த புத்தகம் மண்புழு சார்ந்தது மட்டுமல்ல ஐயா சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் சுய வரலாற்று புத்தகம். 50 ஆண்டுகாலம் வேளாண்மைக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அதில் வந்த தடைகளையும் எதிர்கொண்ட விதத்தையும் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கற்றுக்கொண்ட 52 பாடங்கள் என தன் வாழ்நாளின் அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்" என புத்தகத்தை பற்றி அறிமுகவுரை ஆற்றினார்.

விழாவில்

விழாவில் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி பேசுகையில், "தொடர்ச்சியாக சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கரகோஷங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றேன். அதற்கு ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்கின்றேன். ஆனாலும் சினிமாவைத் தாண்டி நெருக்கமாக ஏதேனும் ஒரு துறையில் செயல்பட வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனை எழுந்தபோது, கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகு `விவசாயம் குறித்து இங்கு பேசுவதற்கு யாரும் முன் வரவில்லை, நீங்கள் விவசாயத்தை பற்றி பேச வேண்டும்' என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

விழாவில்

பிறகே 'உழவன் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை தொடங்கினோம். துவங்கிய போது வழிகாட்டுதலுக்காக பலரையும் தேடிய நிலையில், முதல் நபராக பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களை நாடினோம். அவரை அணுகியது முதல் இன்று வரை பல வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் விவசாயம் சார்ந்த விளக்கங்களை புரியும் வகையிலும் பேராசிரியர் அவர்கள் வழங்கி வருகிறார்.

அறிஞராய் இருந்து, தந்தையாய் பார்க்கப்பட்டு, தற்பொழுது மண்புழு தாத்தாவாக மாறி இருக்கும் அகமது இஸ்மாயில் அவர்களுக்கு வாழ்த்துகள்.

மண்ணைப் பற்றியும் மண்ணை கவனிப்பதன் முறையையும் மிகவும் சுலபமாக மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் புரியும் வகையில் விளக்குவதில் கை தேர்ந்தவர்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையிலும் நன்றாக படித்து பட்டம் பெற்று பேராசிரியர் ஆனவர். கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயம் சார்ந்து எந்த தருணத்தில் எந்த உதவியைக் கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் முதல் நபராய் வந்து உதவியவர் சுல்தான் இஸ்மாயில் சார் . அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்" என்று நெகிழ்சியோடு தெரிவித்தார்.

நூலின் முதல் பிரதியை நடிகர் கார்த்தி, இயற்கை விவசாயி திருப்போரூர் ரங்கநாதன், எக்ஸ்னோரா தலைவர் செந்தூர் பாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பொன் செந்தில்குமார் -பசுமை விகடன் இதழாசிரியர் , திருவாட்டி.சரோஜா குமார் - நந்தவன தோட்டம், திருவாட்டி.மண்வாசனை மேனகா, வானகம் ஏங்கில்ஸ் ராஜா, சுப்ரமணியன், அத்திக்குழு, மாதவரம், அருள் ஜேம்ஸ் -செயலாளர் வேளாண் சுற்றுலா கூட்டமைப்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், தன் நூலைப் பற்றிய விளக்கங்களையும் நூல் உருவான விதம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

ச.கணேஷ் -பொன் பண்ணை, இறையழகன் -தமிழ்நிலம், தமிழ்ப்பண்ணை நிறுவனர் அவர்கள் நெறியாளுமை செய்து செவ்வனே சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் கார்த்தி வெள்ளை நாவல் மரக்கன்றை நட்டார். அனைவருக்கும் மண்வாசனை மேனகா ஏற்பாட்டில் பாரம்பரிய நெல் வகைகளைக் கொண்ட சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. கருப்பு கவுனி ஐஸ்கிரீம், பாயாசம் என சிறப்பாக உணவுகள் பரிமாறப்பட்டன.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

ராமதாஸ் விவகாரம்: ``ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்" - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்...தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதானி - திமுக உறவு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ... மேலும் பார்க்க

``எங்களை அவமானப்படுத்திவிட்டீர்கள்... முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர... மேலும் பார்க்க

தாமதமாகும் கலிபோர்னியா தேர்தல் முடிவுகள்; இந்திய தேர்தல் முறையை பாராட்டிய எலான் மஸ்க்..!

எலான் மஸ்க் கருத்துஉலகின் பெரும் பணக்காரரும், டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில், அரசின் செயல்திறன் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்க இருப்பவருமான எலான் மஸ்க், இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பாராட்டியுள... மேலும் பார்க்க

Kangana Ranaut: ``பெண்களை அவமரியாதை செய்பவர்கள்..." - உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நா... மேலும் பார்க்க

Udhaynithi Stalin: ``இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!" - தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் 27-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நா... மேலும் பார்க்க

``கரூர் விஷன் - 2030; ரூ.50,000 கோடி இலக்கு!'' -அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கரூர் மாவட்டம் ஜவுளி ஏற்றுமதி, பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். இந்நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் க... மேலும் பார்க்க