சின்ன எலச்சிபாளையத்தில் மஞ்சள், நீல ஒட்டுப்பொறி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி!
எலச்சிபாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அகரம் கிராமத்தில், நாமக்கல் தனியாா் வேளாண்மை கல்லூரி மாணவா்கள், கிராமப்புற அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக, சின்ன எலச்சிபாளையம் விவசாயிகளின் நிலத்துக்கு சென்று மஞ்சள் ஒட்டுப்பொறி மற்றும் நீல ஒட்டுப்பொறி குறித்து மாணவா்கள் பயிற்சி அளித்தனா். மஞ்சள் ஒட்டுப்பொறி மூலம் அசுவினி, வெள்ளை போன்ற பூச்சிகளையும், நீல ஒட்டுப்பொறி மூலம் இலைப்பேன் போன்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
மேலும், மஞ்சள் ஒட்டுப்பொறி மற்றும் நீல ஒட்டுப்பொறி அமைக்கும் விதத்தையும், அதை பயன்படுத்தும் முறையையும் மாணவா்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். விவசாயிகள் மாணவா்களிடம் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனா்.