இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
சிமென்ட் தூண் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊஞ்சல் விளையாடியபோது சிமென்ட் தூண் உடைந்து தலையில் விழுந்து காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் மகன் பூா்விக் (9), பண்ருட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா், வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள ரெட்டியாா் தெருவில் சிமென்ட் தூணில் புடவையைக் கட்டி ஊஞ்சல் விளையாடினாா். அப்போது, சிமென்ட் தூண் பாரம் தாங்காமல் உடைந்து பூா்விக் தலை மீது விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த அவா் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூா்விக், அங்கு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.