செய்திகள் :

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்: தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; தலைமைப் பொறுப்பு வரும்

post image

சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2025

1. இதுவரையிலும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்று ஒருவித அவஸ்தை நிலையில் இருந்தீர்கள். இந்த நிலை மாறும். காசு, பணம், மனதில் நிம்மதி எல்லாம் வாய்க்கும்.

2. குரு பகவான் லாபஸ்தானத்தில் வந்து அமர்வதால், சகல விஷயங்களிலும் நன்மை நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பார்த்தும் பார்க்காதது போன்று, விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் எல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். 

3. வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசுக் காரியங்கள், நினைத்தபடி சீக்கிரம் நிறைவேறும். பிரபலங்களின் உதவியைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்

4. குடும்பத்தில் கூச்சல் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  சகோதர, சகோதரிகள் வகையில் உதவிகள் கிடைக்கும்.

5. உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.  உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். சிலருக்கு, நகை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

6. குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளால் நிம்மதியும் பெருமிதமும் உண்டாகும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். தடைகள் நீங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துக்களைக் கேட்டு வாங்குவீர்கள்.

7. உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு, விரக்தி விலகும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். எனினும் இயன்றளவுக்குப் பணத்தைச் சேமிக்கப் பாருங்கள். 

8. சொந்தபந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடும்.

9. வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்வீர்கள். கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். டிசம்பர் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடனான மனத் தாங்கல் விலகும்.

சிம்மம்

10. உத்தியோகத்தில் உங்களுக்கு எதிரான அதிகாரிக்கு இடமாற்றம் உண்டாகும். தள்ளிப்போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். 

11. உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் கீழரோடு வழியே பயணித்தால், சுமார்5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளும் சிம்ம தட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் தரிசித்து, கொண்டைக் கடலைச் சுண்டல் சமர்ப்பித்து வணங்கி வாருங்கள்; நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள்: கவனம்; நிதானம்; ஈகோ வேண்டாம் - முழுப்பலன்கள் இதோ!

விருச்சிகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. குரு பகவான் ராசிக்கு 8-ல் வந்து அமர்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். இனம் காண இயலாதபடி இரு... மேலும் பார்க்க

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்: `பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா? - முழுப்பலன்கள் இதோ!

கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள் 20251. நேர்வழியில் நடப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். `பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா’ என்ற கவலை வேண்டாம். வேலை பார்க... மேலும் பார்க்க

துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள்: விடியல் பிறந்தது; சோதனை முடிந்தது - முழுப்பலன்கள் இதோ!

1. உங்கள் ராசிக்கு 9-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இந்த நிலை மிகப் பெரிய வரப்பிரசாதம். நீங்கள் வெளிச்சத்துக்கு வரப்போகும் காலம். பிரச்னைகளால் சோர்ந்து போனவர்களுக்கு விடியல் பிறக்கும். எங்... மேலும் பார்க்க

கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள்: செயலில் நிதானம் அவசியம்; தூக்கம் கெடும் நிலை உருவாகும்!

கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 20251. இதுவரை லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் இருந்துகொண்டு, பல்வேறு வகைகளிலும் சாதகமான நிலையை உருவாக்கிக்கொடுத்தார் குருபகவான். இப்போது அவர் 12-ல் அமர்வதால், சொல்லிலும் ச... மேலும் பார்க்க

மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்: அவசர வாக்குறுதி வேண்டாம்; திட்டமிட்டு செயலாற்றுங்கள்!

மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 20251. மிதுன ராசிக்கு ஜென்ம குரு காலம் இது. என்றாலும் குரு பகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்குச் சாதகமாகவே அமையும். பூர்விகச் சொத்து, பிள்ளைகள் கல்யாணம், ஓரளவ... மேலும் பார்க்க

ரிஷபம்: விலகும் ஜென்மகுரு; உத்தியோகம் எப்படியிருக்கும்? - குருப்பெயர்ச்சி பலன்கள் 2025

1. தற்போது உங்களுக்கு ஜென்மகுரு விலகுவது மிகவும் சிறப்பம்சம். இதுவரையிலும் இருந்துவந்த பிரச்னைகள் யாவும் மெள்ள விலகும். இப்போது குரு பகவான் 2-ம் இடத்துக்கு வருவதால், நிம்மதி பிறக்கும். தடைகள் விலகும்.... மேலும் பார்க்க