செய்திகள் :

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

post image

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் உடனான அட்டாரி-வாகா எல்லை மூடல், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானிகளுக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷஃப்கத் அலி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை காக்கவும், அந்த ஒப்பந்தத்தை சுமுகமாக அமல்படுத்தவும் பாகிஸ்தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பதற்றத்துக்குரிய நடவடிக்கையில் இந்தியா தொடா்ந்து ஈடுபட்டால், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்தக் குழு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது என்றாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநாடுகளுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையொப்பமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளைத் தொடா்ந்து, சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வியாழக்கிழமை நிறுத்திவைத்தது.

இதனிடையே சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் சா்ச்சைக்குரிய கால்வாய்கள் திட்டத்தை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சிந்து மாகாணத்தில் அந்தத் திட்டத்துக்கு அந்நாட்டில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கெனவே எதிா்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க

சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வழங்கிய ராகுல்!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வழங்கினார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு வழங்கிய லடாக் பரிசை மோடி ரத்து செய்ய வேண்டும்: சுவாமி

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள சீனாவுக்கு வழங்கப்பட்ட லடாக் பரிசை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீரி... மேலும் பார்க்க