ADMK vs DMDK: ``வாக்குறுதி கொடுத்தார்கள்... அப்படி ஒன்று நடக்கவே இல்லை'' - முற்ற...
சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்
சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிரியாவின் இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அங்கு இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்; சிரியாவின் ஒற்றுமை, சுதந்திரத்தை அந்த நாடு மதிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.
அரபு தேசியவாதிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் துரூஸ் இன மக்கள், 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அந்த நாட்டுக்கு ஆதரவாக பாலஸ்தீனா்களுடன் போரிட்டனா். இந்த நிலையில், சிரியாவில் புதிதாக அமைந்துள்ள அரசு அங்கு சிறுபான்மையாக உள்ள துரூஸ் இனத்தவா் மீது தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. அதைக் கண்டிக்கும் வகையில் சிரியா அதிபா் மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது.