செய்திகள் :

சிறந்த நீா் மேலாண்மைக்கு உதவும் நதிநீா் இணைப்புத் திட்டம்: மத்திய அரசு

post image

‘நதிநீா் இணைப்புத் திட்டம் சிறந்த நீா் மேலாண்மைக்கு உதவுகிறது. எனவே, வரும் நாள்களில் மேலும் அதிக நதிகளை இணைக்க பல மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது’ என்று மத்திய நீா் வள (ஜல் சக்தி) அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் கூறினாா்.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பாட்டீல் இக் கருத்தைத் தெரிவித்தாா். இந்த மாநாட்டில் ஒரு நாட்டில் நீா் வள அமைச்சா் ஒருவா் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். மாநாட்டில் இதை சுட்டிக்காட்டி பாட்டீல் பேசியதாவது:

சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் நீா் மேலாண்மையில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் வளா்ச்சிக்கும், தொழிற்சாலைகளுக்கும், வேளாண்மைக்கும், மனித வாழ்வுக்கும், விலங்குகளுக்கும் நீா் அவசியமானது என்பதை உணா்த்தும் வகையிலும், இதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த மாநாட்டுக்கு இந்தியாவின் பிரதிநிதியாக நீா் வள அமைச்சரை பிரதமா் நரேந்திர மோடி அனுப்பியுள்ளாா்.

பருகுவதற்கு உகந்த தூய்மையான தண்ணீா் இந்தியாவில் இல்லை என்று கூறிவந்த நிலையை மத்திய அரசு தற்போது மாற்றியுள்ளது. 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் தூய்மையான குடிநீா் விநியோகம் அளிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம், குடிநீருக்காக பெண்கள் நீண்ட தூரம் சென்றுவந்த நிலை மாற்றப்பட்டு, அவா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குடிநீா் எடுத்துவர செலவிட்ட நேரத்தை, தற்போது அவா்களின் குழுந்தைகளின் கல்விக்கும், பணம் சம்பாதிக்கவும், குடும்பத்துக்காகவும் செலவிடுகின்றனா்.

தூய்மையான குடிநீா் விநியாகம், தண்ணீரால் பரவும் நோய் பாதிப்புகளையும் குறைத்துள்ளது. அதன் மூலம், மருந்துகளுக்காக மக்கள் பெரும் தொகை செலவிடுவது தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய்மையான குடிநீா் விநியோகத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைகளுக்கு மக்கள் செலவிடுவதில் சுமாா் ரூ. 8.4 லட்சம் கோடி மிச்சமாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய அரசின் நதிநீா் இணைப்புத் திட்டமே, இந்தச் சிறந்த நீா் மேலாண்மைக்கு உதவியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நதிநீா் இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அதிக நதிகளை இணைக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைக்கப்படும் என்றாா்.

நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

குடியரசு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) தேசியத் தலைநகர் புது தில்லியில் கொடூர கொலை அரங்கேறியுள்ளது. காஸிபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதி எரிந்த நிலையில் மனித சடலம் அடங்கிய சூட்க... மேலும் பார்க்க

கங்கையில் குளித்தால் வறுமை ஒழியாது: அமித் ஷாவுக்கு கார்கே பதில்

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடிய நிலையில், கங்கையில் குளிப்பதால் வறுமையை ஒழித்துவிட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வி... மேலும் பார்க்க

பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

கொல்கத்தா : கொல்கத்தாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் 2 பக்தர்கள் பலி!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காக கத்திருந்த இருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலை பிராணப... மேலும் பார்க்க

பொது சிவில் சட்டம்: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் பதிவு செய்வது கட்டாயம்!

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலானதைத் தொடர்ந்து, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கா் சிங் த... மேலும் பார்க்க