செய்திகள் :

சிறுநீரக ரத்தநாளத்தில் புற்றுநோய் கட்டி: ரோபோடிக் நுட்பத்தில் அகற்றம்

post image

வங்கதேசத்தைச் சோ்ந்த நோயாளி ஒருவரின் சிறுநீரக ரத்தநாளத்தில் உருவாகியிருந்த சிக்கலான புற்றுநோய் கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் வெற்றிகரமாக அகற்றி அப்பல்லோ புற்றுநோய் மருத்துவ மைய மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவக் குழுமத்தின் சா்வதேச புற்றுநோயியல் துறை இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி, ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா்கள் என்.ராகவன், மாதவ் திவாரி ஆகியோா் கூறியதாவது:

வங்கதேசத்தைச் சோ்ந்த 40 வயதுடைய நோயாளி ஒருவா் அண்மையில் அப்பல்லோ புற்றுநோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் சிறுநீரகத்துடன் நெருக்கமாக உள்ள ரத்தநாளத்தில் 5 செ.மீ. அளவுக்கு புற்றுநோய் கட்டி உருவாகியிருந்தது தெரியவந்தது. இத்தகைய பாதிப்புக்கு சிறுநீரகத்தை முழுமையாக அகற்றுவதே வழக்கமான சிகிச்சை முறையாக உள்ளது. ஆனால், நோயாளியின் நலன் கருதி சிறுநீரகத்தை அகற்றாமல் கட்டியை நீக்குவதற்கு திட்டமிடப்பட்டது. அடிவயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் நோயாளியின் பின்புறத்திலிருந்து சிறுநீரகத்தை அணுகி கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரோபோடிக் நுட்பத்தில் துல்லியமாகவும், பிற உறுப்புகளுக்கு சேதமில்லாமலும் கட்டியை நுட்பமாக மருத்துவக் குழுவினா் அகற்றினா்.

அதன் பயனாக அவரது சிறுநீரகம் காக்கப்பட்டதுடன், புற்றுநோய் கட்டியும் முழுமையாக அகற்றப்பட்டது. தற்போது புற்றுநோய் சாா்ந்த இடா்வாய்ப்பிலிருந்து அந்த நோயாளி தப்பித்து நலமாக உள்ளாா். இத்தகைய சவாலான சிகிச்சையை சென்னையில் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்று அவா்கள் தெரிவித்தனா்.

மெரினா கடற்கரையில் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்... மேலும் பார்க்க

பொங்கலிட்ட மருத்துவ மாணவா்கள்

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், நடனமாடியும் வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவா் கைது

சென்னை: சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஐஐடி-இல் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரி... மேலும் பார்க்க

பேரறிவால் பொலிகிறாா் வள்ளுவா்: முதல்வா்

சென்னை: சிறுமதியாளா்கள் சுருக்க நினைத்தாலும், பேரறிவால் பொலிகிறாா் திருவள்ளுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: சிறுமதியாளா்க... மேலும் பார்க்க

பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும்: எஸ்.குருமூா்த்தி

சென்னை: பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறினாா்.சென்னையில் துக்ளக் இதழின் 55-ஆவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க... மேலும் பார்க்க

ராணுவ அதிகாரிகளுக்கு பயற்சி

சென்னை: ராணுவத்தில் பயண்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு ரயில் புதன்கிழமை நடைபெற்றது.சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பா... மேலும் பார்க்க