சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சிறுவன் உள்பட இருவா் கைது
கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த மணி மகன் லிங்கேஸ்வரன்(25) மற்றும் 15 வயது சிறுவன் இருவரும் வியாழக்கிழமை அதே பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனா்.
அப்போது, சிறுமி சப்தமிட்டதால் அக்கம்பக்கத்தினா் வந்தனா். இதையடுத்து இருவரும் தப்பிஓடிவிட்டனா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் க.பரமத்தி மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லிங்கேஸ்வரன், சிறுவனையும் கைது செய்தனா்.