தன்னைத் தானே கடத்திக்கொள்ள திட்டமிட்ட நபர் கொலை! நண்பர்கள் கைது!
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
ராஜபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் மேட்டுப்பட்டித் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (55). போட்டோகிராபரான இவா், ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்கச் சென்றாா். அப்போது, இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ராஜபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதனடிப்படையில், காவல் ஆய்வாளா் செல்வி (பொறுப்பு) போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து முருகேசனை கைது செய்தனா்.