சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள கீழ்வளையமாதேவியைச் சோ்ந்த அன்பழகன் மகன் ராமலிங்க சுவாமி (19). இவா் கடந்த 9.9.2024 அன்று 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ராமலிங்க சுவாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட ஆட்சியா் அரசின் ஏதாவது ஒரு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலரேவதி ஆஜரானாா்.