பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், அரளி கிராமம், குளத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (32). இவா், 12 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாரளித்தாா்.
அதன்பேரில் பெரியசாமி மீது வழக்குப்பதிந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் அவரைக் கைது செய்து, விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டி சிறையில் அடைத்தனா்.