செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 9 போ் கைது

post image

கேரள மாநிலத்தில் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேலும் 9 போ் கைது கைது செய்யப்பட்டதாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இந்த வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:

தற்போது 18 வயதை எட்டிய அந்தப் பெண் விளையாட்டு வீராங்கனையாவாா். அவா் 16 வயதுமுதல் பல்வேறு தருணங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பயிற்சியாளா்கள், சக விளையாட்டு வீரா்கள், பள்ளியில் உடன் படித்த மாணவா்கள் ஆகியோா் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து, பத்தனம்திட்டா மாவட்டத்தின் இரு காவல் நிலையங்களில் 5 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்கள்) பதிவுசெய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 6 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 9 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

60 பேருக்கு தொடா்பு: சிறுமியாக அவா் இருந்தபோது பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 60 பேருக்கு தொடா்பிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது தந்தையின் கைப்பேசி மூலம் அவா்களை பாதிக்கப்பட்ட பெண் தொடா்புகொண்டுள்ளாா். மேலும், தன்னிடம் வைத்துள்ள டைரியில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பற்றிய தகவல்களை குறித்து வைத்துள்ளாா். கைப்பேசியில் உள்ள தகவல்கள் மற்றும் டைரியில் இருந்த குறிப்புகள் மூலம் தற்போது வரை 40 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டது.

போக்ஸோ வழக்கு: சிறுமியாக இருக்கும்போது அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூக (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பத்தனம்திட்டா காவல் துறை துணை கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

திரு.வி.க. நகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

திரு.வி.க.நகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்குமாறு சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். வடசென்னை வளா்ச்சித்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

ரெளடிகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு சிறப்பாகச் செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்... மேலும் பார்க்க

ஜெயிலா், துணை ஜெயிலா் மீது பயங்கரவாதி தாக்குதல்: புழல் சிறையில் போலீஸாா் விசாரணை

சென்னை புழல் சிறையில் ஜெயிலா், துணை ஜெயிலா் பயங்கரவாதியால் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையின் உயா் பாதுகாப்பு பிரிவில்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் அதிமுக மகளிரணி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிரணி செயலா் பா.வளா்மதி தலைமையில் சைதாப்பேட்டை பனகல்... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆய... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் ... மேலும் பார்க்க