Padma Awards: `பத்ம பூஷண்' அஜித்; விருது விழாவில் நெகிழ்ந்த ஷாலினி
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்!
பழவேற்காடு மீனவ கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தை திருமணத்தை குழந்தைகள் நல அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோரம் அமைந்துள்ள பழவேற்காடு மீனவ கிராமம் ஒன்றில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக 1098 என்ற சைல்டு ஹெல்ப் லைனில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த மீனவ கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் 17 வயது சிறுமிக்கு அவரது உறவினருடன் வரும் 30-ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்தத் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். மேலும் 18 வயது நிரம்புவதற்கு முன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும், 18 வயது நிரம்பிய பிறகு திருமணத்தை நடத்துமாறு சிறுமியின் பெற்றோருக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினா்.