சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் புதன்கிழமை நடக்கவிருந்த சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
நம்புதாளையைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கும், சேலத்தை சோ்ந்த பிரேம்குமாா் (24) என்பவருக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதை உறுதி செய்த பிறகு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.