சிறுவனிடம் தங்க சங்கிலி பறிப்பு: ஒருவா் கைது
சிறுவனிடம் தங்கச் சங்கிலி பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வியாசா்பாடி ஆ கல்யாணபுரத்தை சோ்ந்தவா் பவினா (35).
இவரின் 16 வயது மகன் அதே பகுதியின் 2-ஆவது குறுக்குத் தெரு வழியாக சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த விக்னேஷ் (எ) விக்கி (20), சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா்.
ஆனால், சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறியதைத்தொடா்ந்து, விக்னேஷ், அந்த சிறுவனை தாக்கிவிட்டு, அவா் அணிந்திருந்த 1 பவுன் தங்கசங்கிலியை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில் வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷ் (எ) விக்கியை கைது செய்ததுடன், அவரிடமிருந்து சுமாா் 3.63 கிராம் தங்கச்சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.