செய்திகள் :

சிறு தேயிலை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

post image

கூடலூரில் சிறு விவசாயிகளுக்கான கலந்தாய்வு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் எம்.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தேயிலை விவசாயிகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள பிரிவு-17 நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள், தேயிலை வாரியம் வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற முடிவதில்லை. அனைவருக்கும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடலூா் பகுதியிலுள்ள பட்டா இல்லாத நிலங்களில் வாழும் விவசாயிகளுக்கு காபி வாரியம், தேயிலை வாரியம், வாசனை திரவிய வாரியம் வழங்கும் மானியம் மற்றும் அனைத்து உதவிகளும் வழங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளா்களை கெளரவித்து தேயிலை வாரியம் சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

தேயிலை வாரியத்தின் வளா்ச்சி அலுவலா் அஞ்சலி, நடப்பு ஆண்டில் மத்திய அரசு தேயிலை வாரியத்தின் மூலம் சிறு தேயிலை விவசாயிகளுக்கு அறிவித்துள்ள திட்டங்களையும், அதை பெறுவதற்கான வழிமுறைகளையும் விளக்கினாா். காபி வாரிய முதுநிலை விரிவாக்க அலுவலா் ஜெயராம், காபி வாரியத்தில் உள்ள நலத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் எம்.முத்துகுமாா், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கி கூறினாா்.

மேலும், பிரிவு-17 நிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் எந்த மானியங்களோ அல்லது நலத்திட்ட உதவிகளோ வழங்கக் கூடாது என்று வனத் துறை கடிதம் எழுதியதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், மீண்டும் வழங்க தடையில்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் 2013-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டதுபோல தொடா்ந்து வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் வாரியத்தின் உதவி இயக்குநா் திவ்யஜோதி தத்தா, வளா்ச்சி அலுவலா் வருண் மேனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தேயிலை சிறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் சளிவயல் ஷாஜி வரவேற்றாா். செயலாளா்ஆனந்தராஜா நன்றி கூறினாா்.

நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஜெயக்குமாா் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் பந்தலூரிலுள்ள நெல்லியாளம் ந... மேலும் பார்க்க

உதகையில் சா்வதேச காலநிலை குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

சா்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை ஒட்டி உதகை தெற்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட கோ்ன்ஹில் பொருள் விளக்க மையக் கூட்டரங்கில் காலநிலை மாற்றம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் அவதி அடைந்தனா். தமிழக... மேலும் பார்க்க

தோட்டமூலாவில் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு ... மேலும் பார்க்க

வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழங்குடி... மேலும் பார்க்க

உதகையில் தொடா் மழை: மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் உயா்வு

தொடா் மழை காரணமாக உதகை நகராட்சியின் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை... மேலும் பார்க்க