செய்திகள் :

சிறு நாணய அளவிலான பேட்டரி அறிமுகம்: ஒருமுறை சார்ஜ் செய்தாலே 50 ஆண்டுகள் நீடிக்கும் திறன்!

post image

ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் வாய்ந்த புது வகையான பேட்டரியை மின்னணு பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த பீட்டாவோல்ட் நிறுவனம் அணுசக்தியால் இயங்கும் திறனுள்ள இந்த பேட்டரியை வடிவமைத்துள்ளது.

பி.வி.100 என்று அழைக்கப்படும் இந்த பேட்டரி, சரியாகச் சொல்ல வேண்டுமானால் 15 * 15 * 5 மி.மீ. அளவில் கைக்கு அடக்கமாக இருப்பது முக்கியமானதொரு சிறப்பம்சமாகும்.

நிக்கல்-63 உடன் டைமண்ட்டால்(வைரத்தால்) ஆன செமிகண்டக்டர் பொருளால் இந்த பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. கதிரியக்க திறனுள்ள நிக்கல்-63 ஐசோடோப்பிலிருந்து அணு ஆற்றலை இந்த பேட்டரி கிரகித்துக் கொள்கிறது.

இதனால் ஒரேயொருமுறை சார்ஜ் செய்தாலே அதன்பின் 50 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து உழைக்கும் திறன் கொண்டுள்ளது. மீண்டும் மறுசுழற்சி செய்தும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மைனஸ் 60 முதல் அதிகபட்சமாக 120 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் வாய்ந்ததாகவும் இது உள்ளது. ஆகவே எளிதில் தீப்பிடிக்காது. கடுங்குளிர் சீதோஷ்ணத்திலும் பயன்படுத்தலாம்.

ஆனால் இதிலுள்ள தற்போதைய சிக்கலானது, இதிலிருந்து மிகக் குறைந்த ஆற்றலே வெளியேற்ற முடியுமென்பதுதான். இதிலிருந்து 100 மைக்ரோவாட்ஸ் பவர் மட்டுமே 3 வோல்ட் மின்னழுத்த திறனில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் இதனை ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட அதிக ஆற்றல் தேவைப்படும் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த இயலாத நிலை இப்போதைக்கு உள்ளது. இதற்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் இரும்புத்தாது உற்பத்தி 15% அதிகரிப்பு!

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான என்.எம்.டி.சி. ஏப்ரல் மாதத்தில், அதன் இரும்புத் தாது உற்பத்தி 15 சதவிகிதமும், விற்பனை 3 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.தேசிய கனிம வளர்ச்சி கழகம் (என்எம்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் விலை அதிரடி உயர்வு! கேம் பிரியர்கள் அதிர்ச்சி

உலகளவில் விடியோ கேம் பிரியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் எக்ஸ்பாக்ஸ் விலையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் ஆகியவற்றின் விலை அமெரிக்கா... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.85,000 கோடி முதலீடு செய்யும் ஜியோஸ்டார்! யூடியூபை மிஞ்சுமா?

இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் வரலாற்றில் முன்னிருக்கும் பெரிய அறிவிப்பாக, ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 85,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயா... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

மும்பை: ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.வங்கிகளில் சைபர் ப... மேலும் பார்க்க

ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

புதுதில்லி : 'நெட்கியர்' நிறுவனம், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தனது சென்னை சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் குழுவை, 100 நபர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது நெட்ஜியர் இந்தியாவ... மேலும் பார்க்க

தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!

புதுதில்லி: ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, 'தி மிஸ்ஸிங் லிங்'-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.அதன் துணை நிறுவனமான இன்போசிஸ், ... மேலும் பார்க்க