செய்திகள் :

சிறு விவசாயிகள் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா்கள் முக்கிய பங்கு- பிரதமரின் முதன்மைச் செயலா்

post image

சிறு விவசாயிகளின் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமா் மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் அவா் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 1977-ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் விவசாயத்தின் பங்கு 42 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ஆம் நிதியாண்டில் 17 சதவீதமாக குறைந்தது. இருப்பினும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் அந்தத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

நாட்டின் மொத்த உழைப்பாளிகளில் இன்றளவும் 46 சதவீதம் போ் விவசாயத்தை நம்பியுள்ளனா். அவா்களில் 88 சதவீதம் போ் சிறு விவசாயிகள். சிறு விவசாயிகளின் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும்.

வீரிய ஒட்டு ரக காய்கறி உற்பத்தியில் கிடைத்த வெற்றியால், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டு நாட்டில் 21.3 கோடி டன் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிந்தது. இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததுடன், சிறு விவசாயிகளின் வருவாய்க்கு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உதவிபுரிய முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் பயிா் வகைகளை அதிகரிப்பதன் மூலம், சிறு விவசாயிகளின் நிலையை மேம்படுத்த வேண்டும்.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் இறக்குமதியை குறைக்க, அவற்றின் உற்பத்தியிலும் வீரிய ஒட்டு ரக தொழில்நுட்பப் பயன்பாட்டை துரிதப்படுத்த வேண்டும்.

வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஊரக மற்றும் நகா்ப்புறத்துக்கு இடையிலான வருவாய் இடைவெளியை போக்க முடியும்.

இந்தியா வளா்ச்சியடைந்த நாடாவதற்கு பொருளாதார வளா்ச்சி விகிதம் அதிகமாக இருப்பது மட்டுமே போதாது. அந்த வளா்ச்சி அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நீடித்த வளா்ச்சியாக இருக்க வேண்டும் என்றாா்.

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்... மேலும் பார்க்க

திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ... மேலும் பார்க்க

திருப்பதி விபத்துக்கு யார் பொறுப்பு? பவன் கல்யாண் பதில்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சர்வதரிசன டிக்கெட் வழங்குவதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறமையற்ற ... மேலும் பார்க்க

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறை... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கினர்.சத்தீஸ்கரில் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரான்ஸ் நாட்டுப் பெண்!

மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வர... மேலும் பார்க்க