செய்திகள் :

'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெல்லையில் அமித் ஷா

post image

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லை என்று வருந்துகிறேன்.

மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவர் பாஜக-விற்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார்.

அமித்ஷா
அமித்ஷா

தமிழகத்தைச் சேந்த சி.பி.ராதகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவைக் கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார். தமிழ் மண், மக்கள், மொழி மீது பிரதமர் மோடி பற்றுக்கொண்டிருக்கிறார்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளின் முதுகெலும்பை முறித்துக்காட்டியவர் பிரதமர். நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா கொண்டு வரப்பட்டது.

பிரதமர்கள், அமைச்சர்கள், குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது என்று அந்த மசோதா கூறுகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் சிறை சென்றாலும் பதவியில் நீடிக்கின்றனர். சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா? இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்பு சட்டம் என்று இந்த மசோதாவைக் கூறுகிறார்.

அமித் ஷா
அமித் ஷா

தமிழ் மக்களை முன்னேற்றுவதற்கானக் கூட்டணிதான் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி. தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். திமுகவின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவது தான். நான் சொல்கிறேன் ஒரே நாளும் உதயநிதி முதல்வராக முடியாது. அதேபோல ராகுல் காந்தி பிரதமராக முடியாது. திமுக-வை தமிழகத்தில் வேறோடு பிடுங்கி எறிய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"தன்கரைப் போல சி.பி. ராதாகிருஷ்ணனும் மறைந்துவிடக்கூடாது; மோடி அமித் ஷா பார்வையில்..." - சு.வெ

ஜகதீப் தன்கர் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் திடீரென குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அவரின் திடீர் ராஜினாமா அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தவே, இதன் பின... மேலும் பார்க்க

VCK: "தமிழர் என்பதால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமா?" - என்ன சொல்கிறார் திருமா?

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.கிட்டத்தட்ட மூன்று வாரங்களா... மேலும் பார்க்க

TVK: "விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால்" - பிரேமலதா பளீச் பதில்

மதுரையில் நடந்த தவெக 2வது மாநில மாநாட்டில் விஜயகாந்த் குறித்துப் பேசியிருக்கும் விஜய், "எம்ஜிஆரைப் போல் குணம் படைத்த எனது அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவரும... மேலும் பார்க்க

Andhra: 'ரூ.7000 டு ரூ.6755 கோடி சொத்து' - பணக்கார முதல்வரான சந்திரபாபு நாயுடு; ஏழை முதல்வர் யார்?

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்றைக்கு மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முக்கிய தூணாக இருக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள் பெரிய அளவில் எந்த வித தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. அரசியலு... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய மோசடி: கர்நாடக காங்கிரஸ் MLA கைது; ரூ.12 கோடி, தங்கம் பறிமுதல்! - அமலாக்கத்துறை

காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா கைதுபல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத பந்தய மோசடி நடப்பதாக அமலாக்க இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 22 , 23 ஆகிய தேதிகளில் சிக்கிம், கர்நா... மேலும் பார்க்க