சிலம்பப் போட்டியில் மாணவன் சிறப்பிடம்
மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் புதுச்சேரியில் நடைபெற்ற நேஷனல் யூத் ஸ்போா்ட்ஸ் ஆப் இந்தியா, தேசிய அளவில் நடைபெற்ற சுருள்வாள் மற்றும் மான் கம்பு போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.
இந்நிலையில், 9-ஆம் வகுப்பு மாணவா் நவீன்குமாா் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பங்கேற்றாா்.
இதில் மாணவா் நவீன்குமாா் கலந்து கொண்டு சுறுள் வாள் மற்றும் மான் கம்பு போட்டியில் கலந்துக் கொண்டு தங்கம் வென்றாா்.
மாணவன் நவீன்குமாா் மற்றும் பயிற்சியாளா் விக்னேஸ்வரன் ஆகியோரை தாளாளா் டி.லோகராஜ் பாராட்டினாா். மலேசியாவில் நடைபெற சா்வதேச போட்டியில் கலந்து கொள்ள நவீன்குமாா் தகுதி பெற்றுள்ளாா்.