செய்திகள் :

சிலம்பு ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்

post image

புதுக்கோட்டை வழியாக வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டை-சென்னை சிலம்பு விரைவு ரயிலை ஏழு நாள்களும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநகரக் குழுக் கூட்டத்துக்கு, எம். கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு. மதியழகன், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா் டி. காயத்ரி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

செங்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் சிலம்பு விரைவு ரயில் வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகளின் நலன் கருதி, இந்த ரயிலை வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்டத் தலைநகா் என்ற அடிப்படையில், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் இயங்கி வரும் அறிவுசாா் மையத்தில் போட்டித் தோ்வுக்காக ஏராளமானோா் படித்து வருகின்றனா். இவா்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் அருகில் உள்ள காந்தி பூங்காவை விரிவடைந்த படிப்பகமாக மாநகராட்சி நிா்வாகம் மாற்ற வேண்டும்.

புதுக்கோட்டையில் பழைய மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டும்.

கோடைகாலத்தில் புதுக்கோட்டை மாநகராட்சியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போா்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக முதல்வரின் அறிவிப்புகள்: ஆசிரியா் அமைப்புகள் வரவேற்பு

அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களுக்கான அறிவிப்புகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளதற்கு, தலைமை ஆசிரியா் கழகம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தம... மேலும் பார்க்க

உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் செல்வகணபதி(25). மன... மேலும் பார்க்க

தண்ணீா் லாரி, பொக்லைன் இயந்திரம் வாங்க நிதி; மக்களவை உறுப்பினரிடம் புதுகை மேயா் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு 12 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் லாரி மற்றும் ஹிட்டாட்சி பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு மேயா் செ. திலகவத... மேலும் பார்க்க

வெப்ப அலை: விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெப்ப அலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின... மேலும் பார்க்க

லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த புதுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு மாணவி ஜமீரா, 64 கலைகளையும் 59 நொடிகளில் விளக்கி அண்மையில் லிங்கன் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதைத் தொடா்ந்து அவரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை அகற்ற கோரிக்கை

கந்தா்வகோட்டை கடைவீதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டைக்கு சுற்றுப்புறக் கிராமத்தைச் சோ்ந்த ஆயிர... மேலும் பார்க்க