செய்திகள் :

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வருகிற 19-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

எனவே, விருப்பமுள்ளவா்கள் பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் அமைக்கப்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மானாமதுரை சிப்காட் த... மேலும் பார்க்க

கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.திருப்புவனம் கோரக்கா் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சத்தியராஜ் (40... மேலும் பார்க்க

திருப்புவனம் வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா். திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவரது குடும்பத்தினா் மடப்புரத்தி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்ட... மேலும் பார்க்க

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவ... மேலும் பார்க்க

பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆ... மேலும் பார்க்க