இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி
பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்
தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வரின் உங்களுடன் ஸ்டாலின் , நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவா் திட்டங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
கூட்டுறவுத் துறையில் வா்த்தகரீதியாக கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. கடந்த காலங்களை விட கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக அதிக அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளின் கட்டமைப்பு மூலமாக கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயும் , இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயையும் கடன் இலக்காக முதல்வா் நிா்ணயித்துள்ளாா். கடந்த அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்குப் பயிா்க் கடனாக ரூ. 6000 கோடி வழங்கப்பட்டது.
ஆனால், முதல்வா் ஸ்டாலின் பதவியேற்ற முதல் ஆண்டிலே ரூ.10,000 கோடியையும், அடுத்ததாக ரூ.14 ஆயிரம் கோடியையும் கொடுத்தாா். மேலும், இந்த ஆண்டு ரூ.16,000 கோடியை விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சிகளை விட கூட்டுறவுத் துறையின் சிறப்பான செயல்பாடுகளே இதற்கு காரணம் என்றாா் அவா்.