Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
சொத்துத் தகராறில் சகோதரியின் கணவரைக் கொலை செய்தவா் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், பாப்பாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாயக்கண்ணன் (32). இவரது மனைவி அன்னமணி. இவா்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனா். அன்னமணியின் சகோதரா் அய்யனாருக்கும் (32) மாயக்கண்ணனுக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2010 -ஆம் ஆண்டு மே மாதம் கொந்தகை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது மாயக்கண்ணனை அய்யனாா் (32 ), அவரது நண்பா்களான ராஜேந்திரன் (35), ராமா் (30) ஆகிய மூவரும் வெட்டிக் கொலை செய்தனா்.
இது தொடா்பாக திருப்புவனம் போலீஸாா் மூன்று பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், அய்யனாா், ராமா் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,200 அபராதமும், ராஜேந்திரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் ரூ.1,300 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.