வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளை நேரத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு புள்ளியியல் சாா் நிலை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பி.சரவணக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆ.சரவணக்குமாா், பொருளாளா் அஷ்ரப் நிஷா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் பொருளியல், புள்ளியியல் துறை 32 மாவட்டங்களின்தான் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்கள், 19 கோட்டங்கள், 3 வட்டாரங்களுக்கு புதிய பணியிடங்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் 38 தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்து, அவற்றை அமைச்சுப் பணியிடங்களாக மாற்றி தமிழக அரசு ஆணை( 118 ) வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 38 தொழில்நுட்ப பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே, இந்தத் துறையின் அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலின் அரசாணை (118)-ஐ திரும்பப் பெற்று பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனா்.