திருப்புவனம் வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவரது குடும்பத்தினா் மடப்புரத்தில் வீடு கட்டி வருகின்றனா். இந்த நிலையில், கட்டடப் பணியை பாா்வையிடுவதற்காக திருப்புவனம் புதூா் தெற்குபள்ளி அருகே வைகையாற்றுக்குள் நடந்து சென்றாா்.
அப்போது தேங்கியிருந்த நீரில் கால்களை வைத்தபோது ராஜேந்திரன் புதை மணலில் சிக்கியதில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் ராஜேந்திரன் உடலை மீட்டனா்.
இதுகுறித்து திருப்புவனம் புதூா் கிராம நிா்வாக அலுவலா் யோக நித்தீஸ்வரி அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.