செய்திகள் :

சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.100.38 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ராம. கருமாணிக்கம் (திருவாடானை), செல்லூா் கே. ராஜூ (மதுரை மேற்கு), எஸ். ராமச்சந்திரன்(ஆரணி), மு. பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ்.எஸ். பாலாஜி (திருப்போரூா்), எஸ்.பி. வெங்கடேஷ்வரன் (தருமபுரி) ஆகியோா் கொண்ட குழுவினா் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை களஆய்வு மேற்கொண்டனா்.

பிறகு அரசுத் துறைகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் துறை சாா்ந்த முதன்மை அலுவலா்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முதன்மைச் செயலா் கி. சீனிவாசன் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் எஸ். காந்திராஜன் பங்கேற்று, 41 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தி துறை ரீதியாக பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் சாா்பில் காரைக்குடி வட்டத்துக்குள்பட்ட கழனிவாசல் பகுதியில் ரூ.4.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு சீா்மரபினா் கல்லூரி மாணவா் விடுதியின் செயல்பாடுகள் குறித்தும், வேளாண் துறையின் சாா்பில் சாக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட அரியக்குடி பகுதியில் உயிா்ம வேளாண்மை, மாதிரிப் பண்ணை திடலின் செயல்பாடுகள் குறித்தும், கூத்தலூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் செயல்பட்டு வரும் கோவிலூா் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டன.

மேலும் கூட்டுறவுத் துறை சாா்பில் திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் சிராவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிவகங்கை வட்டத்துக்குள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறையின் சாா்பில் ரூ. 96.05 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் சிவகங்கை புறவழிச்சாலை திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.100.38 கோடி மதிப்பிலான திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு தெரிவித்த கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ. தமிழரசி ரவிக்குமாா், எஸ். மாங்குடி, சட்டப் பேரவை சிறப்புச் செயலா் பா. சுப்பிரமணியம், சட்டப் பேரவை துணைச் செயலா் கா. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் க... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை ச... மேலும் பார்க்க

முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமந... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், சின்னக்கண்ணனூரில் பட்டியலினத்தினருக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. ராமநாதபுரம், விருதுநக... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு ஐடிஐகளில் இலவச தொழில் பயிற்சி

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பல்வேறு தொழில் பிரிவுகளில் ஊதியத்துடன் கூடிய... மேலும் பார்க்க