ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
சிவகாசியில் சுற்றுவட்டச் சாலைப் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தல்
சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2012-ஆம் ஆண்டு சுற்றுவட்டச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னா், 2022-ஆம் ஆண்டு முதல் நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசியைச் சுற்றிலும் 34 கி.மீ. தொலைவு சுற்றுச் சாலை அமைக்க பட உள்ளது. இந்தப் பணி 3 கட்டங்களாக நடைபெறுகின்றன.
இதன்படி, கீழத் திருத்தங்கல், திருத்தங்கல், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, ஆனையூா், ஈஞ்சாா், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி என 10 கிராமங்கள் வழியே இந்தச் சுற்றுவட்ட சாலை செல்கிறது. இதற்கான நில எடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் பூவநாதபுரம் விலக்குப் பாதையிருந்து வடமலாபுரம் வரை 10.4. கி.மீ. தொலைவு நில எடுப்புப் பணிகள் முடிவடைந்தது. கீழத் திருத்தங்கல், ஆனையூா் ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை அனுப்பபட்டது.
இந்த நிலையில், முதற்கட்ட நில எடுப்புப் பணிகள் நிறைவடைந்ததால், சாலை அமைக்கும் பணியையும், 2-ஆம் கட்ட நில எடுப்புப் பணியையும் விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.