செய்திகள் :

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்

post image

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிருந்தபோது இன்று(செவ்வாய்க்கிழமை) காலை, பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் படுகாயமடைந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும் விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Six people were killed in a firecracker factory explosion in Chinnagamanpatti near Sivakasi in Virudhunagar district.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: நியாயப்படுத்த முடியாத தவறு - முதல்வர்

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்ப... மேலும் பார்க்க

நெகிழ்ச்சி சம்பவம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

பிகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.சுமார் 20 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் குடும்பத்தை விட்டுப்... மேலும் பார்க்க

காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இருதயராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையால் ... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: அஜித்குமார் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்த... மேலும் பார்க்க