இன்டர் மிலன், மான்செஸ்டர் சிட்டி தோல்வி: ரசிகர்கள் அதிர்ச்சி!
கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மிலன், மான்செஸ்டர் சிட்டி தோல்வியடைந்தது அந்த அணிகளின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிஃபா முதல்முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டிகள் லீக் சுற்று முடிந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்டர் மியாமியை பிஎஸ்ஜி எளிதாக வென்றது.
மான்செஸ்டர் சிட்டி அணியை சௌதி கால் பந்தின் அல்-ஹிலால் அணி 3-4 என வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. கூடுதல் நேரத்தில் கடைசி நிமிஷங்களில் அல்-ஹிலால் கோல் அடித்து அசத்தியது.
மற்றுமொரு, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இன்டர் மிலான் அணியை 2-0 என ஃப்ளுமினென்ஸ் வென்றது.
இந்தப் போட்டியில் 3, 90+3-ஆவது நிமிஷங்களில் ஃப்ளுமினென்ஸ் அணியினர் கோல் அடித்தனர். இன்டர் மிலன் அணி எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை.
மிகவும் புகழ்பெற்ற ஐரோப்பிய கால்பந்து அணிகள் ஆசிய, தென்னமரிக்க அணிகளுடன் தோல்வியுறுவது கால்பந்து ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலம் ரசிகர்கள் இந்தத் தோல்வியினால் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். காலிறுதிக்கு இதுவரை 6 அணிகள் தேர்வாகியுள்ளன.
Just one more #FIFACWC Quarter-Final to decide… pic.twitter.com/xSXVl0tBVr
— FIFA Club World Cup (@FIFACWC) July 1, 2025
Manchester City and Inter Milan fans are shocked by this defeat. So far, 6 teams have been selected for the quarter-finals.