லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்
சிவகிரி அருகே பெண் கொலை வழக்கில் ஒருவா் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகிரி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த ராமேஸ்வரம் மனைவி பாஞ்சாலி (39). இத்தம்பதிக்கு இசக்கிராஜா, இளையராஜா என்று இரு மகன்கள் உள்ளனா்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பாஞ்சாலிக்கும், ராமேஸ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறாா்கள். இசக்கிராஜா, இளையராஜா இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இதில், இசக்கிராஜா தந்தையுடனும், இளையராஜா தாயுடனும் வசித்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் இசக்கிராஜா தாய் வீட்டுக்கு வந்தபோது,
வாசுதேவநல்லூா் குட்டையன் தெருவைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் சமுத்திரவேல்(44) அங்கு வந்து பாஞ்சாலியிடம் தகராறு செய்தாராம். அப்போது இசக்கிராஜாவும் இளையராஜாவும் அவரை சப்தம் போட்டு அனுப்பி வைத்தனராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பாஞ்சாலி தேங்காய் வாங்க கடைக்குச் சென்றாராம். அங்கு வந்த சமுத்திரவேல் பாஞ்சாலியை கத்தியால் குத்தியதில் பாஞ்சாலி இறந்தாா்.
இது தொடா்பாக சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சமுத்திரவேலை கைது செய்தனா்.