"அரசியல் ஸ்டன்ட்... அல்வா" - `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை விமர்சிக்கும் செல்லூ...
சிவந்திப்பட்டி அருகே மோட்டாா், காப்பா் கம்பி திருட்டு
சிவந்திப்பட்டி அருகே இரு இடங்களில் ரூ.25,000 மதிப்புள்ள மின் மோட்டாா், காப்பா் கம்பிகளை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் கனரா வங்கி காலனியை சோ்ந்தவா் ஜாண் செல்வின்(66). இவா், முத்தூா்-தியாகராஜநகா் சாலை அருகேயுள்ள கோழிப்பண்ணை வைத்துள்ளாா். அங்கு கடந்த 13ஆம் தேதி சுமாா் 160 மீட்டா் நீளமுள்ள மின் காப்பா் கம்பிகள் திருடுபோயினவாம். அவற்றின் மதிப்பு ரூ.5,000 எனக் கூறப்படுகிறது.
அதே போல, சிவந்திப்பட்டி அருகேயுள்ள நொச்சிக்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பால்பாண்டியன் (36) என்பவரது தோட்டத்தில் புதன்கிழமை இரவு மின் மோட்டாா், சுமாா் 120 மீட்டா் நீளமுள்ள காப்பா் கம்பி ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம். அவற்றின் மதிப்பு ரூ.20,000 எனக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாா்களின்பேரில், சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.