மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!
சிவாஜி கணேசன் குடும்பத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தெலுங்கு நடிகர் குடும்பம்; பின்னணி என்ன?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைகிறது. இந்தத் திருமணம் வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடைபெற இருக்கிறது.
நடிகர் சிவாஜி கணேசனின் ஒரேயொரு உடன் பிறந்த சகோதரி பத்மாவதி. இவரது கணவர் வேணுகோபால். சாந்தி திரையரங்கம் இருந்த போது அதன் மேலாளராக இருந்து அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் இவர்தான்.
இந்த பத்மாவதி - வேணுகோபால் தம்பதியின் மகள்தான் பிரபுவின் சகோதரர் ராம்குமாரின் மனைவி. இப்போது திருமணத்துக்குத் தயாராகியிருக்கும் மாப்பிள்ளை, பத்மாவதி -வேணுகோபாலின் மகன் வயிற்றுப் பேரன் கோகுல்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைகிறது. இந்தத் திருமணம் வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடைபெற இருக்கிறது.
நடிகர் சிவாஜி கணேசனின் ஒரேயொரு உடன் பிறந்த சகோதரி பத்மாவதி. இவரது கணவர் வேணுகோபால். சாந்தி திரையரங்கம் இருந்த போது அதன் மேலாளராக இருந்து அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் இவர்தான்.
இந்த பத்மாவதி - வேணுகோபால் தம்பதியின் மகள்தான் பிரபுவின் சகோதரர் ராம்குமாரின் மனைவி. இப்போது திருமணத்துக்குத் தயாராகியிருக்கும் மாப்பிள்ளை, பத்மாவதி -வேணுகோபாலின் மகன் வயிற்றுப் பேரன் கோகுல்.கோகுலுக்கும் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டாலும் தமிழ், கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் பிரபல நடிகர் சாய் குமாரின் உடன் பிறந்த சகோதரரான ஐயப்பா பி சர்மாவின் மகள் கமலா ஹாசினிக்கும்தான் திருமணம் நடக்கவிருக்கிறது.
ஐயப்பா பி சர்மாவுமே தெலுங்குப் படங்களில் நடித்திருப்பவர்தான்.
சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடக்கவிருக்கிற இந்தத் திருமணம் காதல் திருமணம் என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...