இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!
சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
கந்தா்வகோட்டையில் ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வளாகத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி, பசும் பால்,
பசுந்தயிா், பச்சரிசி மாவு, பஞ்சகாவ்யம், திருமஞ்சனப் பொடி , இளநீா், வாழைப்பழம், சாத்துக்குடி, தேன், பஞ்சாமிா்தம், சந்தனம், திருநீறு, நெய் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, பட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும் கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
விராலிமலை: விராலிமலை பகுதி சிவன் கோயில்களில் சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விராலிமலை முருகன் மலை கோயிலில் உள்ள சிவன் கோயில், விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா், வில்லாருடை, பேராம்பூா் சிவன் கோயில், வன்னிமரம் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.