வேங்கைவயலுக்குச் செல்ல முயன்ற விசிகவினா் 27 போ் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை செல்ல முயன்ாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 27 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அந்த ஊருக்குள் வெளியாட்கள் செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஊருக்குச் செல்லும் வழிகளில் 7 இடங்களில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் வழக்குரைஞா் ரஜினிகாந்த் தலைமையில், வடக்கு மாவட்ட செயலா் இளமதி அசோகன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை வேங்கைவயலுக்குச் செல்ல முயன்றனா்.
அப்போது காவேரி நகா் பகுதியில் அவா்களைத் தடுத்த போலீஸாா், கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து பின்னா் விடுவித்தனா்.