அதிமுக பொறுப்புப் பறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை: செங்கோட்டையன்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி சாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு18 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனைகள் நடைபெற்றன.
மண்ணச்சநல்லூா்: திருப்பட்டூா் பிரம்மசம்பத் கெளரி உடனுறை பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி மூலவா் மற்றும் நந்தியெம்பெருமானுக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதேப்போன்று திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில், உத்தமா் திருக்கோயில், திருவாசிமாற்றுரை வரதீசுவரா் திருக்கோயில், சமயபுரம் போஜீசுவரா் திருக்கோயில், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடைபெற்ற பிரதோஷ நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.