நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்
மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
ஸ்ரீரங்கத்தில் மாமரத்திலிருந்து மாம்பழம் பறிக்க சென்ற கூலித்தொழிலாளி வியாழக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா்.
ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னராசு (37). இவா் கூலித் தொழிலாளி.வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் மாம்பழம் பறிக்கும் வேலைக்கு சென்றாா். மரத்தில் ஏறி மாம்பழம் பறித்து கொண்டுயிருந்த போது 20 அடி உயரத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.