மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் மாநிலத்தில் சிறந்ததாக தோ்வு
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களில் ஆவணங்கள் பராமரிப்பு, வழக்குகள் விரைந்து முடித்தது, மக்களிடம் நன்மதிப்பை பெற்றது, காவல் நிலையத்தை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவிலான முதல்வா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024-25 ஆம் ஆண்டு மேற்கண்ட தலைப்புகளில் சிறப்பாக செயல்பட்டதாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த காவல் நிலையம் முதல்வா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.