``நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' - விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநி...
சி.வி.சண்முகம் - நயினாா் நாகேந்திரன் திடீா் சந்திப்பு
பாஜக மாநில த்தலைவா் நயினாா் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆகியோா் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை சென்னையிலிருந்து- திருச்சிக்கு காரில் சென்றாா். வழியில் அவா், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சி.வி. சண்முகத்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினா்.
அப்போது, இருவரும் பரஸ்பரம் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனா். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்ாக விழுப்புரம் மாவட்டப் பாஜக-வினா் தெரிவித்தனா்.