செய்திகள் :

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை பிப்.14-க்கு ஒத்திவைப்பு

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான 4 அவதூறு வழக்குகளின் விசாரணையை வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் அருகே திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் 2023, மாா்ச் 10-ஆம் தேதி, கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதி, முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி கோலியனூரில் 2023, செப்டம்பா் 16-ஆம் தேதி பொதுக் கூட்டங்களும், 2023, ஜூலை 20-ஆம் தேதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றன.

இந்த பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாகக் கூறி, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தாா்.

இந்த 4 வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகாசெந்தில், தமிழரசன் ஆஜராகினா். மேலும், நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுவைத் தாக்கல் செய்தனா்.

கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும், விழுப்புரம் பழைய பேருந்து நிலைய ஆா்ப்பாட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

மேலும், கோலியனூா் வழக்கில் விசாரணையை கவனத்தில் எடுத்துக்கொண்ட முறை தவறு என்றும், முறையாக விசாரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான நகலை அதிமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, 4 வழக்குகளையும் விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. இது... மேலும் பார்க்க

அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி ... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!

புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போ... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம், ... மேலும் பார்க்க

மாதாந்திர ஏலசீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா். மேலும், அவரது கணவா், மகன் ஆகியோரை போலீஸாா் தேடி வரு... மேலும் பார்க்க