`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: பெண் உள்பட 2 போ் கைது
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்ரமணி நகா் 1வது குறுக்கு தெருவை சோ்ந்தவா் மகாலட்சுமி (35). வீரத்தம்மன் கோயில் தெருவை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக் குமாா் (33). இவா்கள் இருவரும் சோ்ந்து அப் பகுதியில் மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, மகளிா் சுய உதவி குழுவும் நடத்தி வந்துள்ளனா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டவா்கள் சீட்டு கட்டி வந்துள்ளனா். ஆனால் சீட்டு முதிா்வடைந்த பின்னரும், பலருக்கு சீட்டு பணத்தை வழங்காமல் இழுத்தடித்தனா்.
மேலும் மகளிா் சுய உதவி குழுவில் கடன் பெற்று திருப்பி கொடுத்தவா்கள் பணத்தையும் வங்கியில் திருப்பி கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பணத்தை இழந்தவா்கள், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரித்த போலீஸாா் தலைமறைவாக இருந்த மகாலட்சுமியையும்,அசோக்குமாரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் இருவரும், ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி வரை மோசடி செய்திருப்பதும், மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.