மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!
சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக, சீனாவின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அரசு முயற்சி செய்து வருகின்றது. இதனால், சீன அதிபர் ஸி ஜிங்பிங் உடனான உரையாடலுக்கு முன்பு, தைவான் நாட்டுக்கு வழங்கவிருந்த ரூ.3,525 கோடி மதிப்பிலான ராணுவ நிதிக்கு, அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற உடன் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீதான இறக்குமதி வரிகளை அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டார். ஆனால், தற்போது சீனாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருவதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யாமல் தவிர்க்க, அந்தச் செயலியின் சீன உரிமையாளரிடம் இருந்து பிரிக்கும் ஒப்பந்தத்திற்கான வரையறைகள் குறித்து, சீன அதிபருடன் டிரம்ப் உரையாடுவார் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெள்ளை மாளிகையின் வெளியே அமெரிக்க செய்தியாளர்களுடன் நேற்று (செப்.18) அதிபர் டிரம்ப் பேசியதாவது:
”டிக்டாக் குறித்து எங்களிடம் ஒரு ஒப்பந்தம் உள்ளது. சீனாவுடன் நான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளேன். இதை உறுதி செய்ய வெள்ளிக்கிழமை நான் அதிபர் ஸி ஜிங்பிங் உடன் உரையாடபோகிறேன்” எனப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!