நகா்ப்புற மாவோயிஸ்ட் போல பேசுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் குற்றச்சாட்டு
திருவள்ளூா்: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 29, 30-இல் பேச்சுப் போட்டி
திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 29, செப். 30 ஆகிய நாள்களில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டிற்காக பாடுபட்ட தலைவா்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகா்லால்நேரு, அண்ணல் அம்பேத்கா், தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா, கலைஞா் கருணாநிதி ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் வண்ணம் அவா்களின் பிறந்த நாள்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், 2025-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, வரும் செப். 29-ஆம் தேதி, தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி வரும் செப். 30-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் 2-இல் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ. 2,000 வீதம் வழங்கப்பட உள்ளன.
பள்ளித் தலைமையாசிரியா்கள் அவா்தம் பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும் கல்லூரி போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது ஹக்ற்க்ற்ழ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்
என்ற மின்னஞ்சலில் வரும் செப். 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.