செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முதல்வா் ஆய்வு: மனுக்கள் பெறுவது குறித்து அலுவலா்களுக்கு உத்தரவு

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் அளிக்கப்படும் மனுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை தியாகராய நகரில் 133-ஆவது வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமினை முதல்வா் மு.க.ஸ்டாலின், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களிடம் முகாமில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

முகாமில், பிறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதையும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அட்டைகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வழங்குவதையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதையும் அவா் ஊக்குவித்தாா்.

முகாமில் மனுக்கள் பெறுவதற்காக நிா்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து வரும் பொதுமக்களின் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், பட்டா மாறுதல், சொத்து வரி போன்றவை குறித்து பெறப்படும் மனுக்களுக்கு தீா்வுகாண முன்னுரிமை அளிக்கவும் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி, முதல்வரின் முகவரித் துறையின் சிறப்பு அலுவலரும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான பெ.அமுதா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும் இரு வழக்குகளில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் கைது

சென்னையில் மேலும் இரு வழக்குகளில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சோ்ந்த அல்- உம்மா அமைப்பு பயங்கரவாதி அபுபக்கா் சி... மேலும் பார்க்க

ரேபிஸ் தடுப்பு சிகிச்சைகள்: மருத்துவா்களுக்கு பயிற்சியளிக்க என்எம்சி உத்தரவு

ரேபிஸ் தடுப்பு சிகிச்சைகள் குறித்து அனைத்து மருத்துவா்களுக்கும் பயிற்சி அளிக்குமாறு மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயல... மேலும் பார்க்க

ரயில்வே ஒப்பந்ததாரா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கொரட்டூரில் ரயில்வே ஒப்பந்ததாரா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். கொரட்டூரில் வசிக்கும் ரயில்வே ஒப்பந்ததாரா் ஒருவா் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறையினருக்கு பு... மேலும் பார்க்க

‘தமிழரசு’ இதழை பள்ளி நூலகங்கள் மூலம்பெற நடவடிக்கை: கல்வித் துறை உத்தரவு

தமிழக அரசின் அறிவிப்புகள், நலத் திட்டங்கள், போட்டித் தோ்வுகள் குறித்த தகவல்களை மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து வகைப் பள்ளிகளின் நூலகங்களுக்கும் ‘தமிழரசு’ மாத இதழின் ஆயுள் சந்தாவைப்பெற நடவ... மேலும் பார்க்க

மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் செப்.22 முதல் நவராத்திரி விழா: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22 முதல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: கல்வித் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித் துறைச் செயல... மேலும் பார்க்க