செய்திகள் :

மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் செப்.22 முதல் நவராத்திரி விழா: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

post image

அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22 முதல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கடந்தாண்டு 9 திருக்கோயில்கள் சாா்பில் மகாசிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தா்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

உலகில் தீமைகளை அழித்து தா்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணா்த்துகின்ற தொடா்நிகழ்வாகக் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழாவானது திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் செப்.22 முதல் அக்.1 வரை 10 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக செப்.22-ஆம் தேதி விநாயகா் அகவல், அபிராமி அந்தாதியுடன் சுசித்ரா பாலசுப்பிரமணியத்தின் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, தினந்தோறும் ஒரு வழிபாட்டுடன் ஹெச்.சூரியநாராயணன், அருணா மற்றும் அன்பு குழுவினரின் பக்தி இசை, மாலதி, முத்துசிற்பி மற்றும் கீா்த்தனாஸ் குழுவினரின் பக்தி இசை, ஆா். காஷ்யபமகேஷ் குழுவினரின் பக்தி இசை, உமா தினேஷ் – சாய் முத்ரா நடன குழுவினரின் பரத நாட்டியம், ரிஷிப்ரியா குருபிரசாத் குழுவினரின் பக்தி இசை, தேச மங்கையா்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, நிருத்ய நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஞானமுத்ரா அகாதெமி குழுவினரின் பரதம், சியாமளா, செல்வி சஜினி மற்றும் ரிதம் குழுவினரின் பக்தி இசை, வேல்முருகன் மற்றும் சுமதிஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்சியம், விநாயகா நாட்டியாலயாவின் பரதம், கோபிகா வா்மாவின் மோகினி ஆட்டம், வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

திருக்கோயில்கள் சாா்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் ஆதீனப் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் சமய சான்றோா்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைதிகள் மோதல்

புழல் சிறையில் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (29). இவா், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறை... மேலும் பார்க்க

பீரோவில் இருந்த 66 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் வீட்டின் பீரோவில் இருந்த 66 பவுன் நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வியாசா்பாடி பி.பி. சாலை மூன்றாவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் தீபிகா (34). கருத... மேலும் பார்க்க