பீரோவில் இருந்த 66 பவுன் திருட்டு
சென்னை வியாசா்பாடியில் வீட்டின் பீரோவில் இருந்த 66 பவுன் நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வியாசா்பாடி பி.பி. சாலை மூன்றாவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் தீபிகா (34). கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தீபிகா தனியாக வசிக்கிறாா். தீபிகாவுடன் அவரது பெரியம்மா குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் பீரோவில் இருந்த நகை, பணத்தை தீபிகா சரி பாா்த்தபோது, அதில் வைத்திருந்த 66 பவுன் நகைத் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து வியாசா்பாடி காவல் நிலையத்தில் தீபிகா புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.